கீரை வகைகள்: உடலின் பலத்தை அதிகரிக்கும் நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும்.
வாயுப் பிரச்சனை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராக வைக்கும். வயிற்றுக் பிரச்சனைகள் குணமாகும். குடல்புண்ணை ஆற்றும்.
அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.
அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிபருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும். சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
மலச்சிக்கலை தீர்க்கும் அகத்திக் கீரை: அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது. சிறு கசப்புச் சுவை கொண்டது.
சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், நாவுச்சத்து, புரதம் ஆகியனை இதில் உள்ளது. பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும்.