Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பார்வை திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் !!

பார்வை திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் !!
உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண்சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண்  புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

* பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை  பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாகக் குறையும். இதுபோன்ற கண் பயிற்சிகள், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
 
* தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.
 
* தூங்கி எழுந்ததும், கண் ரப்பையைச் சுற்றிலும், புருவத்தின் கீழ்ப்பகுதி, புருவத்தின் மேல் பகுதி, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களில் ஆள்காட்டி விரலைவைத்து, மெதுவாக, மென்மையாக கடிகார முள் சுழற்சி பாதை, அதற்கு எதிரான பாதையில் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவை கண்களுக்குள் சீரான ரத்த ஓட்டத்தைப்  பாயச் செய்கிறது. கண்களின் வறட்சித் தன்மையைப் போக்குகிறது.
 
* வெளியில் செல்லும்போது கூலிங் கண்ணாடி அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
 
* கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்