முள்ளங்கி சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் காயவைத்து அலசி வந்தால், பொடுகு பிரச்சனை தீரும். காய்களில் அதிகப்படியான நீர்ச்சத்து நிறைந்திருக்கும்.
முள்ளங்கியில் இருக்கும் நீர்ச்சத்து தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். உடல் சூட்டை குறைத்து உடலுக்கும், தலைமுடிக்கும் சரியான வலிமையை தரும்.
முள்ளங்கியில் இருக்கும் இரும்பு சத்து உடலிற்கு வலிமை தருவதோடு, தலை முடியையும் வலிமையாக்கும். அடர்த்தி குறைவாக இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது.
முள்ளங்கியின் ஜூஸ் தலைக்கு தேய்த்து வருவது முடி உதிர்விற்கு நல்ல பலனை தரும். புதிதான முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
முள்ளங்கி சாற்றில் ஆலிவ் ஆயிலை சேர்த்து முகத்தில் தடவி வர, வறண்ட சருமத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு மறையும்.
முள்ளங்கியை கூழாக்கி அதனை க்ளென்சராகவும், பயனுள்ள பேஸ்பேக்காகவும் பயன்படுத்தலாம். இது தோல்களின் துகள் வரை ஊடுருவி நச்சுக்கிருமிகளை அழிப்பதோடு, முகப்பரு, கரும்புள்ளி இவையெல்லாவற்றையும் நீக்கும்.
அதிகமான நன்மைகளை தரக்கூடிய முள்ளங்கியை, உணவில் சேர்ப்பது உடல் உறுப்புகளுக்கும், மிகவும் நல்லது. அதனால் தொடர்ந்து முள்ளங்கியை உணவில் சேர்த்து வருவது நல்லது.