அரைக்கீரையை குழம்பு அல்லது கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். ஆண்கள் அடிக்கடி அரைக்கீரையை உணவில் சேர்த்து கொண்டால் ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.
அரைக்கீரையை மிளகு, சிறுபருப்புடன் சேர்த்து கொதிக்க வைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும். உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
அரைக்கீரையை தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து பருகி வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.
அரைக்கீரை பல விதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அரைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
கண் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறையும் கண் குளிர்ச்சி அடையும், கண் பார்வை தெளிவு பெறும்.
அரைக்கீரையை துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சமைத்து சூடான சாப்பாட்டில் கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.