Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெல்லம் சாப்பிட்டு வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா...!!

Webdunia
வயிற்றுப் பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், 2 துண்டு வெல்லத்தை  சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும். வெல்லம் மன இறுக்கத்தை  எதிர்க்கும் பொருளாக செயல்படும்.
 
இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் சந்தோஷமான ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும். பொதுவாக மன அழுத்தத்துடன் இருந்தால், இரவு நேரத்தில் தூக்கமே வராது.
 
வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை  சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 
வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும். வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்ற பிரச்சனை உள்ளவர்கள், அப்பிரச்சனையை நினைத்தே பெரிதும் வருத்தம்  கொள்வர். ஆனால் வெல்லம் இதற்கு நல்ல தீர்வை வழங்கும்.
 
வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால், உடலில் மாயங்கள் நிகழ்வதைக் காணலாம். குறிப்பாக இச்செயல் சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். கற்கள் அளவில் மிகவும் சிறியதானால், எளிதில் சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments