பூண்டில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பாதிப்புகளை போக்க உதவுகின்றன.
பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
பூண்டினை சமைக்காமல் அப்படியே உண்பது தான், ஆரோக்கியம், சருமம், கூந்தல் தொடர்பாக ஏற்படும் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும்; கொதிக்க வைத்து, வறுத்து, பொரித்து, மேலும் பல வழிகளில் பூண்டினை சமைத்து உண்பது, அதன் குணப்படுத்தும் பண்புகளை அழித்துவிடும். ஆகையால், காலை வேளைகளில் சிறு பூண்டு பல்களை எடுத்து வாயில் போட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிடலாம்.
பூண்டு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது.
கீரை ஸ்மூத்தியுடன் 1 பூண்டுப்பல்லை பச்சையாக சேர்த்து உட்கொள்ளலாம்; சமைத்த உணவுடன் வெள்ளைப்பூண்டினை சேர்த்து உண்டால், முடி உதிர்வை தடுக்கலாம்.
பூண்டினை நசுக்கி, அதை தேனுடன் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். நன்கு மசாஜ் செய்த பின் தலைக்கு குளித்து விடவும்.