Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சுலின் குறைபாட்டை தவிர்க்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன...?

Webdunia
உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். 

போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.
 
பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும்.
 
நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
 
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது.
 
பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது.
 
எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். 
 
இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments