Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புண்ணை குணமாக்க உதவும் மூலிகை வகைகள் என்ன...?

Webdunia
கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும். கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி, வாய்ப்புண் குணமாகும்.

சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
 
திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும். ஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
 
மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும். மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.
 
மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு, வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.
 
ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும். சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்ப்புண் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments