Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?
நமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். நமது உடலின் முழு  இயக்கத்தையும் இந்த ரத்த அணுக்கள் தான் நிர்ணயம் செய்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிகரித்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிமதுரத்திற்கு உள்ளது. அதிமதுரத்தில் உள்ள மருத்துவ குணம் தான். வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதோடு உடல் வீக்கங்களையும் சேர்த்தே குறைத்து விடும்.
 
பலவித மருத்துவ குணங்கள் ஓமத்தில் நிறைந்துள்ளது. தொற்றுகளினால் ஏற்பட கூடிய நோய்களை இந்த ஓமம் தடுத்து நிறுத்திவிடும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
 
பப்பாளி இலையில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க கூடிய தன்மை அதிகம் இருக்கிறது. பப்பாளி இலையை எடுத்து அதை நன்கு அரைத்து நீர் சேர்த்து தேனுடன் குடித்து வரலாம்.
 
தினமும் வெறும் டீயிற்கு பதிலாக கிரீன் டீ குடித்து நம் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிகச் செய்யும். பூண்டை உணவில் சேர்த்து கொண்டு  சாப்பிட்டால் அவை நம் உடலுக்கு தேவையான வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும்.
 
இஞ்சியை நசுக்கி போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொண்டு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வந்தால் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை  அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரைவள்ளி கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!