வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும்.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாள்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும;
சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கச் செய்யும். தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும்.