Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடலை எளிதாக சுத்தம் செய்ய என்ன செய்யவேண்டும்...?

Webdunia
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பது உங்க வயிற்றில் கழிவுகளை எளிதாக வெளியேற்றும். அதில் கொஞ்சம் தேன், லெமன் சேர்த்து கொண்டால் மெட்டாபாலிசத்தை அதிகரித்து குடல் நச்சுக்களை வெளியேற்றும். ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
 

தண்ணீரின் மூலமாக உடலையும் உள்ளுறுப்புகளையும் சுத்தம் செய்யும் முறை மிகவும் சிறந்தது. அதனால் காலையில் வெறும் வயிற்றில் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை கூட தண்ணீர் குடிக்கலாம்.
 
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உங்க குடல் சுத்தமாகும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுவையான ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.
 
எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் குணமடையும்.
 
ராஸ்பெர்ரி, ஆப்பிள்கள், பட்டாணி, ப்ரோக்கோலி, முதலியன. தானியங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க குடலை எளிதாக சுத்தம் செய்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
 
கேரட், வெள்ளரி, முட்டைக்கோசு, ப்ரோக்கோலி, வோக்கோசு, பீட்ரூட், தக்காளி, கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ  அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த காய்கறிகளிலிருந்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். குடலில் உள்ள கழிவுகள் நீங்கி எடை குறையும்.
 
கற்றாழை இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை குடித்து வர மலச்சிக்கல் சரியாகும். சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் இரைப்பைக் வலி அனைத்தும் போகும்.
 
இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments