காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும்.
பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும். ஆனால் பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம்.
கரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் 'ஏ' கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கரட் ஜூஸில் உள்ள அதிகப்படியானபீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.
சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படுவதோடு சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படும்.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சினைகள் தடுக்கப்படும்.
கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.