Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்வயதில் நரைமுடி ஏன் வருகிறது..? இதை தவிர்ப்பது எப்படி...?

Webdunia
வயதானவர்களுக்கு தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் இந்த காலத்தில் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு  நரை தோன்ற ஆரம்பித்து விடும். 

இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும், ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு  ஏற்படுகிறது.
 
‘மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய  நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள்  நரைமுடிகளாக மாறுகின்றன.
 
இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும். இந்த குறைபாட்டை நீக்க, சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய்,  பயத்த மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.
 
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில்  சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவிகிதம் தவிர்க்க முடியும்.
 
‘பி’ காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப்  போட வேண்டும்.
 
ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கிண்ணம் தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த  வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments