தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ (பெரிய 2 துண்டுகள்)
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இதனுடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள், சோயா சாஸ், தயிர், எலுமிச்சை சாறு, முட்டை, உப்பு ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
மைக்ரோ வேவ் ஓவனை 200 டிகிரி c-க்கு ப்ரீ ஹீட் (preheat) பண்ணவும். பின்னர் ஊற வைத்த சிக்கனை எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோ வேவ் ஓவனில் வைக்கக் கூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி c-யில் 20 நிமிடம் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். மிகவும் சுவையான கிரில் சிக்கன் தயார். இதனை மயோனைஸ் சாஸ்ஸுடன் (mayonnaise sause) பரிமாற சுவையாக இருக்கும்.