தேவையான பொருட்கள்:
நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம் நறுக்கியது
தக்காளி - 100 கிராம் நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் -அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் இஞ்சி, பூண்டு போன்றவை வாணலியில் வறுத்து அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் சிறிது மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும்.
தண்ணீர் ஊற்றத் தேவையில்லை போதுமான உப்பு சேர்க்கவும். நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து கெட்டியாக வந்து உடன் இறக்கி பரிமாறவும். சுவையான நண்டு மசாலா தயார்.