Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையான சிக்கன் மிளகு குழம்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சிக்கன்  - 1/2 கிலோ
மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 100 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
 
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். சிக்கனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
 
சிக்கன் கொதித்துகொண்டிருக்கும் போது அதில் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அதில் கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். கடைசியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சூப்பரான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments