Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் சிக்கன் வடை செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் (எலும்பு நீக்கப்பட்டவை) - 150 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு  சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி ,பூண்டு விழுது, வெங்காயம், சோம்பு மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது  உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளைக் கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும். பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து  கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு  பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சிக்கன் வடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments