தீவிர கடன் பிரச்சனையின் காரணமாக டிராவல்ஸ் அதிபர், பெற்றோரைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(55). இவரது மனைவி லட்சுமி(47). பாலமுருகன் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர்களின் மகன் வைரமுத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
வைரமுத்துவின் டிராவல்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவே, அதை சரி செய்ய வைரமுத்து பல இடத்தில் கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வைரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் தான் இல்லாத உலகத்தில் பெற்றோர் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்த அவர், பெற்றோரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி தனது பெற்றோரை கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், வைரமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.