நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு 5 நாட்களும், கேரளகடல் பகுதிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.