இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
அந்த வகையில் வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
அதன்படி, தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், குமாரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா, காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்யும். சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும்.