பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூலித் தொழிலாளி. இவரது மகன் அப்துல்காதர் கடந்த 10 ஆண்டுகாலமாக தீராத தொடை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போது இடது காலை முழுவதுமாக அகற்றினால்தான் சிகிச்சை செய்யமுடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால் சென்னையில் உள்ள அவர்களது உறவினர்கள் கூறியதன் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினர்.
மேலும் புற்றுநோய்க் கட்டிகளுக்கு ரேடியோ கீமோ தெரப்பிகள் மூலம் குணப்படுத்தும்ன் சிகிச்சைகள் அளித்து குணப்படுத்துகின்ற நிலையில் தற்போது அறுவைச் சிகிச்சை செய்து அக்கட்டியை முற்றிலும் அகற்றி மருத்துவமனை சாதனை செய்துள்ளதாகத் மருத்துவனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாமம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் பல லட்சங்கள் செலவாகியிருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.