தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மார்ச் 10ஆம் தேதி இதுகுறித்து சிறப்பு முகாம் அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் இந்த முகாமில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறையின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.