தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெசவாளர்களுக்கு ஏற்கனவே விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 700 யூனிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் 1 முதல் முன் தேதி 8 இந்த திட்டம் அமல்படுத்த படம் என்றும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மின்சார கட்டணம் உயர்வு காரணமாக விசைத்தறி நெசவாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டது. மேலும் ஈரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் விசைத்தறி தொழில்சாலைகள் மூடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.