தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியதை தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது. தாமதமாக பருவமழை தொடங்கியிருந்தாலும் மழை பொழிவு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போதைய தகவலின் படி தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல்.