பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
முன்னதாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை அங்காடிகள் செயல்பட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரம் பின்வருமாறு...
1. சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை,
2. வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம் வரை,
3. பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை,
4. பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்.எஸ்.பி. ரோடு,
5. அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை,
6. பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை,
7. லப்பைக்குடிகாடு பேரூராட்சியில், மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை