அமமுக கட்சி செய்தித் தொடர்பாளர் புகழேந்தி சமீபத்தில் அக்கட்சித் தலைவர் தினகரனுக்கு எதிராக சில விமர்சனங்களை முன்வைத்தார்.இதனையடுத்து அவர் அமமுகவில் இருந்து விலகப்போகிறார் என்ற கருத்து வெளியானது. அமமுகவில் இருக்கும் பல முக்கிய பிரமுகர்கள் எல்லாம் திராவிட( அதிமுக, திமுக ) கட்சிகளுக்கு போய்க்கொண்டிருப்பதால் , தினகரன் கட்சி பலம் குன்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இன்று, கோவை மாவட்டத்தில், அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புகழேந்தி கூறியதாவது :
இடைத்தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்றால் தினகரன் யாரிடம் விலை போனார் ?
டிடிவி. தினகரன் பின்னால் இனிமேல் எங்களால் பயணிக்க முடியாது. நம்முடைய கனவுகள் எல்லாம் பொய்யாகிப் போனது. இந்த நிலையில் தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. ஒருவேளை அதிமுகவுக்கு எதாவதும் பிரச்சனை என்றால் நாங்கள் சிப்பாய்களாக துணையாய் நிற்போம்.
தினகரன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இழிவு செய்து பேசி வருகிறார். மக்கள் அதை ஏற்கவில்லை. அதிமுக கட்சிக்கோ, ஆட்சிக்கு எதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்போம் . அவரை நம்பி, அதிமுகவிலிருந்து அமுகவில் இணைந்ததால் தகுதி நீக்கம் நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் மன உளைச்சலில் உள்ளனர். அதனால் எம்.எல்.ஏவாக உள்ள தினகரன் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.