19 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் டிஐஜி பதவியிலும் 10 பேர் எஸ்பி பதவிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெயா, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டிஐஜி பதவியில் இருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி,ஜி.ராமர் ஆகிய 10 பேரும் எஸ்.பி பதவியில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.