சென்னை மெரினா கடற்கரையில் இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி சிக்கிய நிலையில் அங்கிருந்த மீட்டு குழுவினர் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க கூடாது என்று அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் சிறுவர்கள், பெண்கள் அவ்வப்போது ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வந்த பெரிய அலை காரணமாக அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனை அடுத்து அங்கிருந்த மீட்பு குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று இருவரின் உயிரையும் காப்பாற்றினார்கள். இரு சிறுவர்களும் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று வருகின்றனர் என்றும் அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிய வந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு சிறுவர்களும் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தவுடன் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.