Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு!!

கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு!!
, புதன், 12 அக்டோபர் 2022 (15:34 IST)
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு.


கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் கோவை தங்கம். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார் விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரது மகள் சத்யா தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு  இளைஞர் காங்கிரஸ் இருந்துள்ளார். அதன் பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகவும் பணியாற்றி வந்தார்.

2001 ஆம்  ஆண்டு  முதல் 2006 வரை வால்பாறை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதேபோல 2006 இல் இருந்து 2011 வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் 2019 இல் இருந்து 2021 பிப்ரவரி வரை தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார் பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி திமுகவில் இணைந்தார்.

15 நாட்களுக்கு முன்பு தொண்டையில் சிறிய பொன் ஏற்பட்டுள்ளதால் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 12.30 மணிக்கு மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது இதனை அடுத்து திமுக  தொண்டர்கள்  தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

1965 ஆம் ஆண்டு மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சற்று நேரத்தில் கனிமொழி எம்பி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோவை தங்கம் வீட்டிற்கு  வருகை தர உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லுயிர் பாதுகாப்பு: அழியும் நிலையில் இருந்த தவளை, தேரை, பல்லி இனங்களை மீட்ட பல நூறு குளங்கள்