Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகவரித்துறையினருக்கு 23 ஆண்டுகளாக சமூக அநீதி- அன்புமணி ராமதாஸ்

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (18:03 IST)
வணிகவரித்துறையினருக்கு  கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது  என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து, தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

‘’வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது!

வணிகவரித்துறையினருக்கு  கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு  வணிகவரித்துறையினருக்கு  உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும்!

வணிகவரித்துறையில் 120-க்கும் உதவி ஆணையர் பணியிடங்கள்  பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments