Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு மூன்று மதிப்பெண் போனஸ்: தேர்வுத்துறை

Webdunia
வியாழன், 28 மே 2020 (11:36 IST)
12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு மூன்று மதிப்பெண்
12ஆம் வகுப்பு வேதியல் பாடத்தில் 3 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்வுத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது என்பதும், இந்த பணியில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும்போது அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் 3 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
கேள்வி எண் 31 என்ற இந்த கேள்விக்கு மூன்று மதிப்பெண்கள் போனஸ் தர வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதே போன்று வேறு பாடங்களிலும் ஏதாவது தவறு இருந்தால் அதற்குரிய போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் அனைத்து கேள்விகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments