Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்ற தேர்தலில் 3- வது அணி ..? - கமல்ஹாசன் சூசகம்

Advertiesment
parliament. election
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:27 IST)
மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா திருவாரூரில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அதில் அவர் கூறியதாவது, 
 
அதிமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாமக தற்போது அதே அதிமுகவில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது.
 
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி வரும் 24 ஆம் தேதிமுதல் தொடங்கப்படும் என்றார்.அதில்ட் வேட்பாளர் தேர்வில் வயது கல்வித் தகுதி, ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும் என்றும் படித்த இளைஞர்களுக்கு முதல் மரியாதை தரப்படும் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் அதிமுகவின் மெகா கூட்டணி குறித்து கூறியதாவது. ’ மெகா கூட்டணி என்பது மக்கள் முடிவு பண்ண வேண்டியது. முன்பு ஒரு கட்சியை விமர்சித்து புத்தகத்தையெல்லாம் வெளியிட்ட கட்சி தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் ’என்றார்.
 
மேலும் மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற்உ கூறி, தமிழகத்தில் 3 வது அணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 குழந்தைகள் மரணம் ...அதானி மருத்துவமனையின் மீது குற்றச்சாட்டு...