அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி ரவீந்திரன் சப்-ஜூனியர் பிரிவில் தமிழக அணியின் சார்பாக பங்கு பெற்று 4 பதக்கங்கள் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் குழு பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களும், தனி நபர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் என தேசிய அளவில் 4 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தார். அபார சாதனை புரிந்த மாணவி யாழினி ரவீந்திரனுக்கு அஹமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சாப்ட் டென்னிஸ் பெடரேசன் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மகேஷ் காஸ்வாலா, தேசிய பொதுச்செயலாளர் சகுந்தலா கடோதரா ஆகியோர் பதக்கங்கள் அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.
தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து இன்று பள்ளி திரும்பிய மாணவி யாழினி ரவீந்தரன், அவரது டென்னிஸ் பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் S.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், முதல்வர் s.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.
புகைப்படம்: தேசிய அளவில் அபார சாதனை புரிந்த மாணவி யாழினி ரவீந்திரனை குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பதக்கம் அணிவித்துப் பாராட்டும் சாப்ட் டென்னிஸ் பெடரேசன் ஆஃப் இந்தியாவின் தலைவர் மகேஷ் காஸ்வாலா, பொதுச்செயலாளர் சகுந்தலா கடோதரா ஆகியோர் கலந்து கொண்டனர்.