இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில் விரைவில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் திறந்துவைக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தின் முதற்கட்டமாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உடைய 20 லட்சம் வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரை கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் மக்களிடம் வரவேற்பை பெரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.