Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 லட்சம் கல்லூரி கட்டணம் செலுத்திய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்.. சென்னையில் பரபரப்பு..!

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (10:39 IST)
சென்னையில் சவீதா கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 5 மாணவர்களும் ரூ 3 லட்சம் கல்லூரி கட்டணம் கட்டிய நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என கூறியதால் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மாணவர்களிடம் கல்லூரி கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள்  தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று வந்து கட்டுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும், இதனால் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்திய நிலையில் கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் பல மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சவீதா கல்லூரியில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மாணவர்களிடம் கல்லூரி கட்டணத்தை பெற்று தலைமறைவான இரண்டு ஊழியர்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கல்லூரி மாணவர்களிடம் இருந்து கல்லூரி கட்டணத்தை பெற்று திடீரென தலைமறைவாகிய இரண்டு கல்லூரி ஊழியர்களால் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு கல்லூரி வளாகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments