Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

5 மாவட்டங்களை குறிவைத்த அரசு: முழு ஊரடங்கு பின்னணி என்ன??

5 மாவட்டங்களை குறிவைத்த அரசு: முழு ஊரடங்கு பின்னணி என்ன??
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (14:25 IST)
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு ஏற்ப சில ஊரடங்கு தளர்வுகளை மாநில முதல்வர்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 
 
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் கூறிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு... 
 
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். 
 
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். 
 
முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. 
 
முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி.
 
முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி.
 
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி.
 
முழு ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்.
வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
 
முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
 
நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
 
முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் மூடப்பட்ட மசூதிகள் - ரமலான் தொழுகைகள் நடப்பது எப்படி?