ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை தாக்கல் செய்தது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சென்னை போலீஸ். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேரை கைது செய்துள்ள போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர் என தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் இந்த வழக்கில் உள்ள பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் கைதாக வாய்ப்பு என கூறப்படுகிறது.