சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 56 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக சில பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தகுதியில்லாமல் பணியில் சேர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு போதிய தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த 56 பேராசிரியர்களை அதிரடியாக துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று உள்ளே