Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றும் 7000க்கு அருகில் சென்ற கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் படிப்படியாக குறைவு

இன்றும் 7000க்கு அருகில் சென்ற கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் படிப்படியாக குறைவு
, செவ்வாய், 28 ஜூலை 2020 (18:41 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6972 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6972 பேர்களில் 1107 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,438 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3659 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 4707 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 59,584 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,84,664 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் எரிபொருள் நிரம்பும் போர் விமானங்கள்... இணையதளத்தில் வைரல்