பொதுவாக அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை பதிவு செய்துவிட்டு 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த 30 நாட்களில் எந்தவித எதிர்ப்பும் வரவில்லை என்றால் மட்டுமே தேர்தல் ஆணையம் அந்த கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்
இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பிக்க 30 நாட்கள் தேவை இல்லை என்றும் ஏழு நாட்கள் போதும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. 7 நாட்களில் கட்சியை பதிவு செய்துவிட்டு அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை என்றால் அந்த கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
இந்த நடைமுறை தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 7 நாட்களில் யாராவது புதிய கட்சியை ஆரம்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்