முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50% பெற எனக்கு உரிமை உள்ளது என 83 வயது முதியவர் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசுதேவன் என்ற 83 வயது நபர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை வேதவல்லி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்றும் எனக்கு ஜெயலலிதா சகோதரி முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
எனவே இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் தான் என்றும் எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது பதிலளிக்கும் படி தீபா மற்றும் தீபக் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.