Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக 1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (18:08 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 962 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,05,548 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 962 பேர்களில் 105 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,176  ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,078 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,58,360 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,15,237 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 515,09,851 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments