மத்திய இணை அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எல். முருகன் சார்பில் தாக்கல் செய்த மனு என்று தள்ளுபடி செய்யப்பட்டது
மேலும் இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மத்திய இணை அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்கு இனி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.