மருத்துவம் மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எம்டி, எம்எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதியுள்ள 50 சதவீதம் இடங்களில் போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு முப்பது சதவீதம் ஊக்க மதிப்பெண் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் மருத்துவம் மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் அந்த முடிவில் நீதிமன்ற தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
எனவே மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.