முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது திடீரென வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் இரு கட்சியினரும் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்கள் பிரச்சாரத்துக்கு சென்றபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்த வீடியோவை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஆதாரமாக அளித்து புகார் அளித்தனர்
இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நத்தம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தேர்தல் பிரசாரம் செய்தபோது பணம் கொடுத்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது