கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த கோவை தெற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் கடைக்குள் இருந்தது நாகப்பாம்பு என கண்டறிந்துள்ளனர்.
பின்னர் அந்த 5 அடி நீள நாகபாம்பை பத்திரமாக மீட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அடிக்கடி பாம்புகள் தென்படுகிறது. குறிப்பாக வளாகத்தின் பின்புறம் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம், அங்குள்ள புதர்களில் அதிகளவு பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் பாம்புகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வளாகத்திற்குள் மண்டி கிடக்கும் புதர்கள் குப்பைகள் அனைத்தையும் அகற்ற வேண்டுமெனவும், தெரிவித்து வருகின்றனர்.