கடந்த மாதம் நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் அன்றைய தினத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக இன்று மீண்டும் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் நீட் தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பல்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இதற்கு ஆளுநரின் செயலர் இன்று பிற்பகலில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது