திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்திட வேண்டும், தமிழ் நாடு பருத்தி கழகத்தை அமைக்க வேண்டும், ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ள 25 லட்சம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.