Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

15000 ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை ஒரே அமுக்கா அமுக்கிய அதிகாரிகள்

15000 ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை ஒரே அமுக்கா அமுக்கிய அதிகாரிகள்
, புதன், 20 ஜூன் 2018 (10:09 IST)
பட்டா மாற்றம் செய்ய 15000 ரூபாயை லஞ்சமாகக் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
 
இந்நிலையில் பட்டா மாற்றம் செய்யவேண்டும் என்றால் 15000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் கோவிந்தராஜிடம் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை செல்வத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். 
 
இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்புத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண்