வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோடையில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.